Thursday, August 15, 2013

ஆகி விடுதல்

மனிதன் மழலையோடு
கொஞ்சும் போது மழலையாகி விடுகிறான்.
படிக்கும் போது மாணவனாக,
பின் இளைஞனாக, கணவனாக,
தகப்பனாக
கோவிலில் பக்தனாக
கொடுக்கையில் வள்ளலாக
படிக்கையில் வாசகனாக
படைக்கையில் கலைஞனாக
அறிவிழந்த நிலையில் மூர்க்கனாக
செயற்கரிய செயல் செய்கையில் வீரனாக
பிறர்க்காக வாழ்ந்து மடிகையில் தெய்வமாக
பிறரை சுரண்டி வாழ்கையில் அயோக்கியனாக
கடைசியில் பிணமாக.
எத்தனை உருமாற்றங்கள்.
ஆனால் மனிதன் எப்போது
மனிதனாகவே இருக்கிறான் என்று
மோட்டு வளையைப் பார்த்து
பல மணி நேரம் யோசித்துப்
பார்த்தும் விடை கிடைக்காத நிலையில்
'மூடிட்டு ஒன்ற வேலயப் பாத்துட்டுப் போடா தாயோளி'
என்று தெருவில் யாரோ யாரையோ
ஏசும் சத்தம் காதில் விழுந்தது.
ஆகவே மனிதன் அவனுக்கிட்ட பணியை
மூடிக் கொண்டு செய்யும்போது மட்டுமே
மனிதனாக இருக்கிறான் என்பதோடு
நிறுத்திக் கொள்கிறேன் என்
சித்தாந்த வாந்தியை.

1 comment: