Thursday, August 15, 2013

ஆகி விடுதல்

மனிதன் மழலையோடு
கொஞ்சும் போது மழலையாகி விடுகிறான்.
படிக்கும் போது மாணவனாக,
பின் இளைஞனாக, கணவனாக,
தகப்பனாக
கோவிலில் பக்தனாக
கொடுக்கையில் வள்ளலாக
படிக்கையில் வாசகனாக
படைக்கையில் கலைஞனாக
அறிவிழந்த நிலையில் மூர்க்கனாக
செயற்கரிய செயல் செய்கையில் வீரனாக
பிறர்க்காக வாழ்ந்து மடிகையில் தெய்வமாக
பிறரை சுரண்டி வாழ்கையில் அயோக்கியனாக
கடைசியில் பிணமாக.
எத்தனை உருமாற்றங்கள்.
ஆனால் மனிதன் எப்போது
மனிதனாகவே இருக்கிறான் என்று
மோட்டு வளையைப் பார்த்து
பல மணி நேரம் யோசித்துப்
பார்த்தும் விடை கிடைக்காத நிலையில்
'மூடிட்டு ஒன்ற வேலயப் பாத்துட்டுப் போடா தாயோளி'
என்று தெருவில் யாரோ யாரையோ
ஏசும் சத்தம் காதில் விழுந்தது.
ஆகவே மனிதன் அவனுக்கிட்ட பணியை
மூடிக் கொண்டு செய்யும்போது மட்டுமே
மனிதனாக இருக்கிறான் என்பதோடு
நிறுத்திக் கொள்கிறேன் என்
சித்தாந்த வாந்தியை.

Thursday, August 8, 2013

திருக்குரல்

அகால வேளையில் ஒலிக்கும்
அலைபேசியின் அதிர்வுச் சத்தம்.
அயர்ந்து உறங்குகையில்
கைக்கெட்டாத தூரத்தில் நின்று
ஒலிக்கும் அலாரத்தின் சத்தம்.
ஆடிமாத வெள்ளிக் கிழமைகளில்
அதிகாலை நேரத்தில் ஒலிக்கும்
அம்மன் பாடல்களின் சத்தம்.
மயிர் பிளக்கும் வெயிலில்
வியர்வை வடிய சிக்னலில்
காத்திருக்கையில் ஒலிக்கும்
வாகனங்களின் ஹாரன் சத்தம்.
இவையெல்லாம் நாராசம் என்பார்
தம் மழலையின் அகண்ட வாய்
அழுகைச் சத்தம் கேளாதார்.

Sunday, July 21, 2013

பேரழகி

ரயிலில் எதிர் இருக்கைப் பெண்.
அழகென்ன?
கண்கள் சொல்லும் கவிதை என்ன என்ன?
கூர் நாசி நெஞ்சைத் துளைப்பதென்ன?
செவ்விதழ்கள் தேனருந்த அழைப்பதென்ன?
காதோரம்  கருங்கற்றைக் குழலசைவதென்ன?
அவளதை ஜிமிக்கிகள் ஆட ஒதுக்கி அடக்குவதென்ன?
கழுத்தில்  மென் தங்கச் சங்கிலி புரள்வதென்ன?
அரைத்த சந்தன நிறத்திற்கேற்ப
அவளணிந்திருக்கும் உடையின் வனப்புதான் என்ன என்ன?
கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் அலட்சியம்தான் என்ன என்ன?
இத்தனை என்ன என்னுள் ஓடிக்கொண்டிருக்க
வைதத கண் வாங்காமல் நான் அவளைப் பார்த்திருக்க
தன் செவ்வாயைத் திறந்து
கடைவாய்ப் பற்கள் தெரிய
ஆவென விட்டாள் ஒரு முழ நீளக் கொட்டாவி.
சூர்ப்பனகை தோற்றாள் போ !!!!.